என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண்கள் தலைமையில் இருக்கும் வீடும், நாடும் வளம் பெறும்- இயக்குனர் கரு.பழனியப்பன் பேச்சு
- திண்டுக்கல்லில் நடைபெற்ற கல்லூரி விழாவில் இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்றார்.
- பெண்கள் தலைமையில் உள்ள வீடு மற்றும் நாடு வளம்பெரும் என அவர் பேசினார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று பேசியதாவது:-
பெண்கள் பொருளா தாரத்தில் உயர்ந்த பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும். பெண்கள் தலைமையில் இருக்கும் வீடு எவ்வாறு சிறப்பாக இருக்குமோ அதே போல பெண்கள் தலைமையில் செயல்படும் நாடும் சிறப்பாக இருக்கும். அதற்காக ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்குரிய தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
துறை சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து நேர்மையாக சம்பாதிப்பது எவ்வாறு முக்கியமோ அதே போல நடைமுறைக் கல்வியும் அவசியமாகும். மாணவ-மாணவிகளாகிய நீங்கள் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க செல்லும் போது தமிழ்மொழியை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் இந்தி மட்டுமே வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு செய்து விடும். செய்தித்தாள்கள் படிப்பதை தினசரி வாடிக்கையாக வைத்துக் கொண்டால் தேசத்தின் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள முடியும் மதத்தின் அடிப்படை வாதிகள் பெண்கள் வளர்ச்சிக்கு எப்போதும் தடை போடுவார்கள். எனவே அது போன்ற நபர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நம் மனம் எப்போதும் 2 விதமான எண்ணங்களை தேடிப்பார்க்கும். ஆனால் நாம் ஒன்றில் தெளிவான முடிவை எடுத்து தேர்வு செய்ய வேண்டும். படிப்பு, வேலை, பொருளாதாரம் இவை சார்ந்து நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் ஜாதிய உணர்வுகள் வளராது. இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.