search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரமடையில் அனுமதியின்றி இயங்கிய 21 செங்கல் சூளைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
    X

    காரமடையில் அனுமதியின்றி இயங்கிய 21 செங்கல் சூளைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

    • மின்வாரிய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
    • 21 செங்கல் சூளைகளுக்கு மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீசை வழங்கினர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள மருதூர், காளம்பா–ளையம், கெம்மாரம்பா–ளையம் உள்பட பல்வேறு பகுதி–களில் 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன.

    அண்மையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கோவை தடாகம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 124 செங்கல் சூளைகளை மூடி சீல் வைத்தன.

    இதேபோல் காரமடை மேற்கு பகுதிகளில் அனுமதியின்றி செங்கல் சூளைகள் இயங்கி வருவதாக மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.

    இதனையடுத்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளின் மின் இணைப்பினை துண்டிக்க அறிவுறுத்தியது.

    அதன் அடிப்படையில் நேற்று தாயனூர் தெற்கு மின்வாரிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 16 சூளைகள், தேக்கம்பட்டி மின்வாரிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 5 சூளைகள் என மொத்தமாக அனுமதியின்றி செயல்பட்டு வரும் 21 செங்கல் சூளைகளுக்கு மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீசை வழங்கினர்.

    அந்த எச்சரிக்கை நோட்டீசில் அனுமதி இன்றி இயங்கி வரும் தங்களது செங்கல் சூளைக்கான மின் இணைப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் துண்டி–ப்பு செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்ப–ட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை முதலே அனும–தியின்றி செயல்பட்டு வரும் 21 செங்கல் சூளைகளின் மின் இணைப்பினை மின்வாரிய துண்டித்து வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தாயனூர் மின்வாரிய அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால் செங்கல் சூளை அதிபர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

    Next Story
    ×