என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு முககவசம் வினியோகம்
- மாநகர பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு முககவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- மாற்றுத் திறனாளிகள் சிலருக்கு முககவசம் அணிவித்தனர்.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முககவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
விழிப்புணர்வு
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி சார்பில் முககவசம் அணிந்து செல்வது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன.
அதன்ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு முககவசம் வினியோகிக்கும் நிகழ்ச்சியை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, நகர்நல அலுவலர் ராஜேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ரதவீதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள், தள்ளவண்டிகடைகளில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி, தொற்று மீண்டும் அதிகரிப்பதால் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாற்றுத் திறனாளிகள் சிலருக்கு முககவசம் அணிவித்தனர்.
இதேபோல மாநகர பகுதி முழுவதும் பொது மக்களுக்கு முககவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மாநகராட்சி சார்பில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.