search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான செஸ் போட்டி பள்ளி மாணவனுக்கு பாராட்டு
    X

    வசுந்தரனுக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்ற காட்சி.

    மாவட்ட அளவிலான செஸ் போட்டி பள்ளி மாணவனுக்கு பாராட்டு

    • தமிழக அரசு நடத்திய செஸ் போட்டியில் தென்காசி மாவட்ட அளவில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்றார்.
    • 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்டு வெளிநாட்டு வீரர்களின் அணிவகுப்பில் தலைமை தாங்கி அழைத்துச் சென்றார்.

    சங்கரன்கோவில்:

    பாண்டியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் வசுந்தரன். இவர் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு நடத்திய செஸ் போட்டியில் தென்காசி மாவட்ட அளவில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்றார்.

    பின்னர் 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்டு வெளிநாட்டு வீரர்களின் அணிவகுப்பில் தலைமை தாங்கி அழைத்துச் சென்றார். மேலும் தமிழக அரசின் ஏற்பாட்டின் படி விமானத்தில் செஸ் விளையாடினார்.இவரது சகோதரர் கார்த்தி குமார் என்பவரும் 19 வயதுக்குட்பட்ட செஸ் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வெற்றி பெற்ற வசுந்தரனுக்கு பாண்டியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை பராசக்தி தலைமை தாங்கினார்.ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் வரவேற்றுப் பேசினார்.ஆசிரியர்கள் மாரித் தங்கம், ஏஞ்சல் மலர் மெரினா, பெர்ஜிலின், அழகு மகேஸ்வரி, வர்மா, வீரலட்சுமி, சகாயம், ஹெலன், கவிதா, குருவம்மாள், அருணா, ஐஸ்வர்யா, கவிதா மற்றும் மாணவர்களும், பொதுமக்களும பாராட்டி பேசினர்.

    விழாவில் மாணவனுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டன. ஆசிரியர் வர்மா நன்றி கூறினார்.

    Next Story
    ×