search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசாக தி.மு.க. இருக்கிறது - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி.

    தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசாக தி.மு.க. இருக்கிறது - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • அமைச்சர் கீதாஜீவன் தொழிலாளர்களுக்கு தீபாவளியையொட்டி இனிப்புகள் மற்றும் பரிசு பெட்டகம் வழங்கினார்.
    • நீட் தேர்விற்கு எதிராக நீட் விலக்கு கோரி பொறியாளர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் தொ.மு.ச. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோ சனை கூட்டம் மாவட்ட என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்ச ங்கம் தொ.மு.ச. மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளருமான அன்பழகன் தலைமையில் நடந்தது.

    மாவட்ட என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் தொ.மு.ச. தலைவர் முத்துராஜ், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச்செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தொழிலாளர்களுக்கு தீபாவளியையொட்டி இனிப்புகள் மற்றும் பரிசு பெட்டகம் வழங்கி ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் தான் தொழிலாளர்கள் நலன் அதிகளவில் பாது காக்கப்பட்டது. காரணம் தொழிலாளர்கள் நலனில் எப்போதுமே கலைஞர் காலம் முதல் இப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி தங்களது செயல்பாடுகளின் மூலம் மற்ற சங்கங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும், அதை நிறைவேற்றித் தரும் அரசாக இந்த அரசு இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், நீட் தேர்விற்கு எதிராக நீட் விலக்கு கோரி பொறியாளர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    விழாவில், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பகுதி செயலாளர்கள் ஜெயகுமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பொறியாளர் அணி மாவட்ட தலைவர் பழனி, துணை அமைப்பாளர்கள் ஜான்சன், சின்னதுரை, ஜாபர், மாநகர பொறியாளர் அணி அமைப்பாளர் ரூபன், துணை அமைப்பாளர் பழனி பாலகணேஷ், தூத்துக்குடி மாவட்ட என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்க அலுவலக செயலாளர் எஸ்.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் சுடலைமுத்து, சங்கர், அழகுபாண்டி, நல்லமுத்து, முருகபெருமாள், சாமிக்கண்ணு, இமாம் பிரேம் நஜிம், கருப்பசாமி, செந்தூர்பாண்டி, மணிகண்டன், விக்னேஷ், நவீன்குமார், ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×