search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4-வது நினைவு தினத்தையொட்டி கருணாநிதி உருவப்படத்திற்கு  தி.மு.க.வினர்  நாளை மரியாதை செலுத்த வேண்டும்- நெல்லை மாவட்ட செயலாளர்கள்  அறிக்கை
    X

    4-வது நினைவு தினத்தையொட்டி கருணாநிதி உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் நாளை மரியாதை செலுத்த வேண்டும்- நெல்லை மாவட்ட செயலாளர்கள் அறிக்கை

    • நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கருணாநிதி உருவப்படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தவேண்டும் என கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
    • கிராமங்கள் தோறும் கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என அப்துல்வகாப் எம்.ஏல்.ஏ அறிக்கையில் கூறியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் கலைஞர் கருணாநிதி நினைவை போற்றும் வகையில் நாளை (7-ந் தேதி) களக்காடு அண்ணா சிலை முன்பு கருணாநிதி உருவப்படத்திற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இதேபோல் நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், வார்டு பகுதி களில் கருணாநிதி உருவப்படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி மாவட்ட, மாநில நிர்வாகிகள், தலைமை, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    மத்திய மாவட்டம்

    இதே போல் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.ஏல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனு சரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது நினைவை போற்றும் வகையில் மத்திய மாவட்ட அலுவலகத்தில் நாளை காலை கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. மேலும் மத்திய மாவட்டத்திற்கு உட்பட மாநகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழகங்கள் தோறும் கலைஞரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கிராமங்கள் தோறும் கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். மேலும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×