search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கை
    X

    டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்.

    திண்டுக்கல்லில் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கை

    • சுகாதார ஆய்வாளர்கள், பூச்சியியல் வல்லுனர்கள், களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு கொசுக்கள் அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் வீட்டு உரிமையாளர் களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் புழுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது.

    இதனால் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. திண்டுக்கல்லில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் தடுப்பு பணிகளில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று மாநகர் நல அலுவலர் செபாஸ்டின் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள், பூச்சியியல் வல்லுனர்கள், களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு கொசுக்கள் அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் மாநகராட்சி 19 வார்டுக்கு உட்பட்ட தெய்வசிகாமணி புரம், ஏ.ஆர். நகர், கிழக்கு ஆரோ க்கிய மாதா விஸ்தரிப்பு, அழகு நகர் உள்ளிட்ட பகுதி களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் ஈடுபட்டனர். அப்போது கொசு புழுக்கள் கண்டறியப்பட்டது. அவற்றில் அபேட் மருந்து ஊற்றியும், பயன்படாத சிமெண்ட் தொட்டிகளை உடைத்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இது குறித்து மாநகர் நல அலுவலர் செபாஸ்டின் கூறுகையில், கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், வீடு வீடாக சென்று டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். கொசு புழுக்கள் கண்டறியப்பட்ட வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மீண்டும் கொசு புழுக்கள் கண்டறியப்ப ட்டால் வீட்டு உரிமையாளர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×