என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளம் பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்- கலெக்டர் செந்தில்ராஜ் பேச்சு
- சாத்தான்குளம் வருவாய் தாசில்தார் அலுவலகத்தில் 95 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 31 ஆயிரத்து 725 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் வருவாய் தாசில்தார் அலுவலகத்தில் 95 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 31 ஆயிரத்து 725 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வருவாய் தாசில்தார் புகாரி முன்னிலை வகித்தார். தாசில்தார் தங்கையா வரவேற்றார்.
தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:-
சாத்தான்குளம், ஸ்ரீவை குண்டம் பகுதிகளுக்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் தெரிவித்து ஸ்ரீவைகுண்டம் சட்டபேரவை உறுப்பினர் தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.
சாத்தான்குளம் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி களும் அடுத்த 3 ஆண்டுக ளுக்குள் தன்னிறைவு பெறும் வகையில் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு தனியாக கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட்டு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அனைவரும் அரசின் திட்டங்களை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இதில் மாவட்டஊராட்சித் தலைவர் பிரம்ம சக்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, சுரேஷ், சாத்தான் குளம் ஒன்றியக்குழு தலைவி ஜெயபதி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், வடக்கு வட்டார தலைவர் பார்த்த சாரதி, பேரூராட்சி உறுப்பினர்கள் ஜோசப் அலெக்ஸ், லிங்கபாண்டி, மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட காங்கி ரஸ் நிர்வாகிகள், அரசு அதிகாரி கள் கலந்து கொண்டனர்.
முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லெனின் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்