search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் பள்ளிகளில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மாணவ-மாணவிகள் பங்கேற்பு
    X

    திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரியில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல் பள்ளிகளில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மாணவ-மாணவிகள் பங்கேற்பு

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகள் போதைபொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி இன்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திண்டுக்கல்லில் எம்.வி.எம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மேயர் இளமதி, துைணமேயர் ராஜப்பா உள்பட பலர் பங்கேற்றனர். ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விசாகன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் உள்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    பழனி நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ தலைமையிலும், வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காந்திராஜன் எம்.எல்.ஏ தலைமையிலும், நத்தம் துரைகமலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நத்தம் பேரூராட்சி தலைவர் தலைமையிலும், என்.பி.ஆர் கல்லூரியில் நத்தம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தலைமையிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    நிலக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் தலைமையிலும், மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தலைமையிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மாணவ-மாணவிகள் போதைபொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×