search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரும்பு லாரி மோதி மருந்து கடைக்காரர் பலி
    X

    கரும்பு லாரி மோதி மருந்து கடைக்காரர் பலி

    • வரதராஜன் வெள்ளகோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு 10 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த ராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (50). இவர் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், ருத்ரேஷ் (20) என்ற மகனும் தக்ஷனா (14) என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் வரதராஜன் வெள்ளகோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு 10 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    மொடக்குறிச்சி அருகே வேலம்பாளையம் பகுதியில் வரதராஜன் வந்து போது எதிரே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதி விபத்தானது.

    இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த வரதராஜனுக்கு தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து சம்பவ இடத்திலேயே வரதராஜன் பலியானார். தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் வரதராஜனின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×