search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மருந்து கடைகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
    X

    கோவையில் மருந்து கடைகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

    • போதைப்பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • விழிப்பு–ணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி கல்வி மற்றும் கல்லூரி கல்வித்துறைகள் நடத்திடவேண்டும்.

    கோவை

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதை தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

    போதைப்பொருட்கள் மற்றும் போதை பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பெற்றோர்களுடன் இணைந்து அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி கல்வி மற்றும் கல்லூரி கல்வித்துறைகள் நடத்திடவேண்டும்.

    இந்த நிகழ்ச்சிகளில் உடல்நிலை, சட்டம், உளவியல் நடவடிக்கைகள், உள்ளிட்டவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு இருக்கும் எனில் விடுதி காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக இது குறித்து போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பள்ளிகளுக்கு அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யாமல் இருப்பதை உறுதி செய்திடவேண்டும்.

    மருந்துகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளில் அடிக்கடி மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, போதைப்பொருட்கள் விற்பனை சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், போதைமருந்து தடுப்பு பிரிவு தொடர்பு எண்களை அனைத்து மருந்து கடைகளிலும் வைக்க அறிவுறுத்த வேண்டும்.

    போதைப்பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த மையத்தில் மருத்துவர்கள், உளவியல் டாக்டர் உள்ளிட்டவர்களை கொண்டு போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.இந்தகுழு ஒருங்கிணைத்து செயல்பட்டு, போதைப் பொருள் பயன்பாட்டினை முழுமையாக ஒழித்திடதேவையான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை டீன் நிர்மலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×