search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவந்திபுரம் கோவில் வரை  வாகனங்களை அனுமதித்ததால் கடும் ேபாக்குவரத்து நெரிசல் பக்தர்கள் கடும் அவதி
    X

    திருவந்திபுரத்தில் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளதை படத்தில் காணலாம். 

    திருவந்திபுரம் கோவில் வரை வாகனங்களை அனுமதித்ததால் கடும் ேபாக்குவரத்து நெரிசல் பக்தர்கள் கடும் அவதி

    • புரட்டாசி மாதம் மூன்றாவது வாரம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பொதுமக்கள் சாலையில் அமர்ந்தும் சாமி கும்பிடுவதற்கு காத்துக் கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் புரட்டாசி மாதம் மூன்றாவது வாரம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வதும், சனிக்கிழமை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி செல்வதும் வழக்கமாகும். இந்த நிலையில் தற்போது தேவநாத சாமி கோவிலில் தேசிகர் பிரம்ம உற்சவம் நடைபெறுவதால் இன்று ரத்னாங்கி சேவை வெகு விமர்சையாக நடைபெறும்.

    இதன் காரணமாக தேவநாதசுவாமி கோவிலில் இருந்து தேசிகர் மற்றும் யோக நரசிம்மர் மலை மேல் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடைபெற்ற மீண்டும் கீழே வந்து ஒவ்வொரு சன்னதியில் உள்ள சாமிகளை தேசிகர் தரிசித்து செல்வதால் இன்று காலை தேவநாத சாமி கோவில் வளாகத்தில் பூஜைகள் நடைபெற்றதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இது மட்டும் இன்றி இன்று விஜயதசமி என்பதால் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து பள்ளிகளில் சேர்ப்பதும், பயபக்தியுடன் வழிபட்டு செல்வதும் காண முடிந்தது.

    இன்று காலை வழக்கம் போல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்தனர். ஆனால் சிறப்பு பூஜை தொடர்ந்து நடைபெற்று வந்ததால் தேவநாத சாமி கோவிலுக்குள் காலை 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்காத காரணத்தினால் நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பொதுமக்கள் சாலையில் அமர்ந்தும் சாமி கும்பிடுவதற்கு காத்துக் கொண்டிருந்தனர். அப்போது நூற்றுக்கணக்கான கார், வேன், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கோவில் வளாகம் வரை போலீசார் பணிகளில் இல்லாததால் திரண்டு சாலையில் நிறுத்திவிட்டு சென்றனர். இதன் காரணமாக திருவந்திபுரம் கோவில் முழுவதும் பக்தர்கள் செல்ல முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் ஸ்தம்பித்தது. மேலும் பக்தர்களுக்குள் கடும் வாக்குவாதமும் நிலவி வந்தது.

    மேலும் வாகனங்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சென்றதால் கோவிலை சுற்றியும் மற்றும் தெருக்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் வீடுகள் முன்பு நின்றதால் அடுத்த கட்டமாக கோவிலுக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் பக்தர்கள் விழிப்பிதுங்கி நின்றனர். இதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் பக்தர்களுக்குள் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதாக போலீசருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸ் டி.எஸ்.பி. கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் திரண்டு வந்தனர். பின்னர் அவசர அவசரமாக பொதுமக்களை அணிவகுத்து வரிசையில் நிற்க வலியுறுத்தியும், வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்காமல் கடும் எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழக்கம்போல் சாமி கும்பிடுவதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக திருவந்திபுரம் முழுவதும் ஸ்தம்பித்ததோடு பொதுமக்கள் கடும் அவதி அடைந்ததை காண முடிந்தது.

    Next Story
    ×