search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நஷ்ட ஈடு வழங்காததால்  உயர்கோபுரம் அமைக்க இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகை
    X

    மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்.

    நஷ்ட ஈடு வழங்காததால் உயர்கோபுரம் அமைக்க இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகை

    • உரிய தொகை வழங்காததால் கடந்த 6-மாதத்திற்கு முன்பு, அமைச்சர் இ.பெரியசாமியிடம் நேரில் சந்தித்து விவசாயிகள் புகார் செய்தனர்.
    • இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகையிட்டு தங்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணத் தொகையை வழங்கும்படி கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே வி.கூத்தம்பட்டி வழியாக விருதுநகரிலிருந்து கோயம்புத்தூருக்கு உயர் மின் கோபுரம் செல்கிறது. ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரக்கல் ஊராட்சியில் வீ.கூத்தம்பட்டி, தெற்கு மேட்டுப்பட்டி, வடக்கு மேட்டுப்பட்டி, வண்ணம்பட்டி ஆகிய பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மின்வாரிய அதிகாரிகள் மின்கோபுரம் அமைக்க இடம் கொடுத்ததற்கு உரிய தொகை வழங்காததால் கடந்த 6-மாதத்திற்கு முன்பு, அமைச்சர் இ.பெரியசாமியிடம் நேரில் சந்தித்து விவசாயிகள் புகார் செய்தனர்.

    அதன்பின்னர் அவர் நடவடிக்கை எடுத்ததின் பேரில் விவசாயிகள் சிலருக்கு மட்டும் மின்வாரிய அதிகாரிகள் பணம் வழங்கியுள்ளனர். அதன்பின்னர் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு செல்லவில்லை. இந்நிலையில் வீ.கூத்தம்பட்டிக்கு சென்ற மின்வாரிய அதிகாரிகளை இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகையிட்டு தங்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணத் தொகையை வழங்கும்படி கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தி.மு.க. ஒன்றியகுழு உறுப்பினர் வீ.கூத்தம்பட்டியை சேர்ந்த செல்வி காங்கேயன் கூறுகையில் விவசாயிகளிடம் இடம் கேட்க வரும்போது அதிகாரிகள் உங்கள் இடத்திற்குரிய பணத்தை தருகிறோம் என கூறி 3 வருடங்கள் ஆகிறது. இதுநாள்வரை முறையாக உரிய நிவாரண பணம் தரவில்லை. அதனால் இங்கு வந்த மின்சாரத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இதுகுறித்து அமைச்சர் இ.பெரியசாமியிடம் புகார் செய்துள்ளோம் என்றார். விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×