என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரியில் தசரா திருவிழா - மாரியம்மன் கோவிலில் சப்பர பவனி
- விழா நாட்களில் தினசரி காலையிலும், மாலையிலும் வழக்கமான பூஜையும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
- நிறைவு நாளான நேற்று இரவு பூஜையை தொடர்ந்து அம்மனின் பூஞ்சப்பரபவனி தொடங்கியது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவிலில் தசரா திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது.
விழா நாட்களில் தினசரி காலையிலும், மாலையிலும் வழக்கமான பூஜையும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. ஒவ்வொரு நாளும் கிருஷ்ணராகவும், சுப்பிரமணியராகவும், மகாலட்சுமியாகவும், பராசக்தியாகவும், அன்னபூரணியாகவும், சரஸ்வதியாகவும் அம்பாளின் காட்சியருளல் நடந்தது. நிறைவு நாளான நேற்று இரவு பூஜையை தொடர்ந்து அம்மனின் பூஞ்சப்பரபவனி தொடங்கியது. முக்கிய வீதிகளின் வழியாக சென்ற சப்பரபவனி இன்று காலையில் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தனசேகரன், ராதாகிருஷ்ணன், தங்கப்பாண்டியன் உள்பட பலர் செய்திருந்தனர்.