search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் வேடம் அணிந்த தசரா பக்தர்கள் காணிக்கை வசூல்
    X

    வேடம் அணிந்து காணிக்கை வசூலிக்கும் பக்தர்கள்.


    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் வேடம் அணிந்த தசரா பக்தர்கள் காணிக்கை வசூல்

    • குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும்.
    • சிறுவர்கள் தங்களுக்கு பிடித்தமான குரங்கு,கரடி போன்ற மிருகங்கள் வேடங்களையும், சின்ன சின்ன குழந்தைகள் சுவாமி வேடங்களும் அணிந்து காணிக்கை வசூல் செய்து வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும்.

    திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர்.

    தற்போது கோவிலில் கொடி ஏறியதும் பக்தர்கள் கோவிலுக்கு வந்துள் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு வாங்கி அதை வலது கையில் கட்டி தனக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

    இதில் சிறுவர்கள் தங்களுக்கு பிடித்தமான குரங்கு,கரடி போன்ற மிருகங்கள் வேடங்களையும், சின்ன சின்ன குழந்தைகள் சுவாமி வேடங்களும் அணிந்து காணிக்கைவசூல் செய்து வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முக்கிய ஊர்களில் தசரா பக்தர்கள் அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்யும் அனைவரும் வருகின்ற அக்டோபர் மாதம் 5-ந்தேதி 10-ம்திருநாள் அன்று தாங்கள் வசூலித்த காணிக்கையை கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள். இதற்காக கோவிலை சுற்றி நிரந்தர உண்டியல் தவிர தற்காலிக உண்டியல் 100க்கு மேற்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×