என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின்வாரியத்தினர் ஆய்வு
- 2 மருத்துவமனைக்கும் மின் வினியோகம் வழங்கும் அனைத்து மின் வழித்தடங்களிலும் இன்று ஆய்வு நடைபெற்றது.
- வலைய தரசுற்று, பிரிவு படுத்துதல் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நெல்லை:
நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனை மற்றும் பல்நோக்கு மருத்துவ மனைக்கு வட கிழக்கு பருவ மழையின் போது தங்கு தடையின்றி மின் வினி யோகம் வழங்கும் பொருட்டு சிறப்பு ஆய்வு கூட்டம் பாளை தியாகராஜ நகரில் உள்ள வட்ட மேற் பார்வை மின் பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. மேற் பார்வை மின் பொறி யாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
அதனைத் தொடர்ந்து 2 மருத்துவமனைக்கும் மின் வினியோகம் வழங்கும் முதன்மை மின் பாதையான பாளை உபமின் நிலை யத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் 11 கிலோ வோல்ட் மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் தடங்கள் ஏற்பட்டால் மாற்று வழியில் உடனடியாக மின்சாரம் வழங்கும் மார்கெட் மின் பாதை, சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் வ.உ.சி.மின்பாதை, தியாகராஜநகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் மகராஜநகர் மின்பாதை என அனைத்து மின் வழித்தடங்களிலும் இன்று ஆய்வு நடைபெற்றது.
மின் சாதனங்களான வலைய தரசுற்று, பிரிவு படுத்துதல் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கள ஆய்வு மேற்கொண்டார். இயற்கை இடர்பாடுகளின் போது அனைத்து பொறுப்பு மின் பொறியாளர்களிடம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள உத்தர விட்டார்.
மேலும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் இயற்கை இடர்பாடுகளின் போது தவிர்க்க இயலாத நேரத்தில் மின்ஆக்கியை நல்ல இயக்க நிலையில் வைப்பதற்கும், தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு வைப்பதற்கும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வு பணியின் போது நெல்லை மின் பகிர்மான வட்ட செயற் பொறியாளர் ( பொது ) வெங்கடேஷ்மணி, உதவி செயற் பொறியாளர்கள் சார்லஸ் நல்லத் துரை, சங்கர், சிதம்பரவடிவு, உதவி மின் பொறியாளர் வெங்கடேஷ், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மின் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்