search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓவேலி பகுதியில் அரசு ஆஸ்பத்திரியை சூறையாடி யானைகள் அட்டகாசம்
    X

    ஓவேலி பகுதியில் அரசு ஆஸ்பத்திரியை சூறையாடி யானைகள் அட்டகாசம்

    • பீரோவை தும்பிக்கை யால் அடித்து உடைத்தது
    • ஆஸ்பத்திரியில் நோயாளிகள் இல்லாததால் பெரும் ஆபத்து தவிா்ப்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் வனப்பகுதிகள் ஆகும். இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.

    காட்டுக்குள் தற்போது வறட்சி நிலவுகிறது என்பதால் அங்கு உள்ள வனவிலங்குகள் அடிக்கடி காட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள ஊருக்குள் புகுந்து அங்கு இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் தோட்டப்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    காட்டுக்குள் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் வனவிலங்குகளை தடுத்து நிறுத்தும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் காட்டு விலங்குகளின் அட்டகாசம் தொடர்கதையாகவே நீடித்து வருகிறது.

    கூடலூா் தாலுகாவில் உள்ள ஓவேலி பாா்வுட் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நள்ளிரவில் காட்டு யானைகள் திரண்டு வந்தன.

    அப்போது அவை சுகாதார நிலையத்தின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின. மேலும் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த நோயாளி களின் படுக்கை மற்றும் மேஜை-நாற்காலிகளை உடைத்து சூறையாடின.

    தொடர்ந்து ஆஸ்பத்திரி யின் பீரோவை தும்பிக்கை யால் அடித்து உடைத்த யானைகள், அதில் இருந்த மருந்துகள், பதிவேடுகள் உள்பட அனைத்துப் பொரு ட்களையும் சேதப்படுத்தின. பின்னர் அந்த யானைகள் அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்தன.சுகாதாரநிலைய பணியா ளா்கள் காலையில் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது காட்டு யானைகள் ஆஸ்பத்திரியை சூறையாடிய விவரம் தெரியவந்தது. எனவே அதிர்ச்சி அடைந்த ஊழி யர்கள், இதுகுறித்து சம்ப ந்தப்பட்ட உயரதிகாரிக ளுக்கு தகவல் கொடுத்தனா்.

    மேலும் தகவலறிந்த வனத்துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்கு சேதமதிப்பீடு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் காட்டு யானைகள் புகுந்தபோது, அங்கு நோயாளிகள் எவரும் இல்லை. எனவே அங்கு அதிா்ஷ்டவசமாக பெரும் ஆபத்து தவிா்க்கப்பட்டது.

    கூடலூா் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த காட்டு யானைகள், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்ற சம்பவம், பணியாளா்களி டம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×