என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் கோர்ட்டுகளுக்கு முக கவசம் அணிந்து வந்த ஊழியர்கள்- பொதுமக்கள்
- அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- தனிமனித இடைவெளியையும், அடிக்கடி கைகளை கழுவவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
கோவை
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்ச ரிக்கையாக தமிழகம், புதுவையில் உள்ள ஐகோர்ட்டுகள், கீழமை நீதிமன்றங்களில் இன்று முதல் முக கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
அதன்படி நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள், வக்கீல்கள் உள்ளிட்டோர் முக கவசம் அணிந்து கோர்ட்டுக்கு வர அறிவுறு த்தப்பட்டது. மேலும் தனிமனித இடை வெளியை கடைபிடிக்கவும், அடிக்கடி கைகளை கழுவவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
கோவை, பொள்ளாச்சி, மதுக்கரை, வால்பாறை, மேட்டுப்பாளையம் கோர்ட்டுகளிலும் இன்று கோர்ட்டுக்கு வந்த ஊழியர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்தனர்.
முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு அதனை அணிந்து கோர்ட்டுக்குள் வர உத்தரவிடப்பட்டது.
கோவையில் கொரானா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களுக்கு செல்பவர்கள் முகக் கவசம் அணிந்து செல்லுமாறு சுகாதார த்துறை யினர் அறிவுறுத்தி யுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த நோய்த் தொற்று பரவல் தற்போது 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 40-க்கும் மேல் அதிகரித்துள்ளது. தற்போது 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொ ற்றுக்கு சிகிச்சையில் உள்ளனர்.
நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே மருத்துவ மனைகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் முகக் கவசம் அணிந்து செல்லுதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாட்டு வழிமுறைக ளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், கோவையில் பஸ் நிலையங்கள், ரெயில்நிலையம், சந்தைகள், வணிக நிறுவனங்களுக்கு செல்பவர்களில் பெரும்பா லானோர் முகக் கவசம் அணிவதில்லை. ஏற்கனவே நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு வழிமுறை களை பின்பற்றாமல் அலட்சி யமாக செயல்பட்டால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கட்டாயம், இல்லா விட்டாலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்