search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பச்சிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்
    X

    பச்சிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்

    • பள்ளிக்கு 400 மீட்டர் சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும்.
    • பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஒன்றியம் பச்சிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 380 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளி மாணவர்கள் தரையில் அமர்ந்து படிப்பதால், பெஞ்ச், டெஸ்க் வழங்குமாறு கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம் பள்ளி சார்பில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதையடுத்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில், பெஞ்ச் மற்றும் டெஸ்குகள் பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கண்ணியப்பன் தலைமை தாங்கினார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த்அசோக் ஆண்டர்சன் வரவேற்றார். மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சோக்காடி ராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பெஞ்ச், டெஸ்குகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    தொடர்ந்து தலைமை ஆசிரியர் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில், பள்ளியின் பின்புறம் காடு உள்ளது.

    பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் அடிக்கடி பாம்புகள் பள்ளிக்குள் புகுந்து விடுகிறது. இதனால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.

    எனவே பள்ளிக்கு 400 மீட்டர் சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும். பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

    பள்ளிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும். சமையல் செய்ய பாத்திரங்களை வழங்க வேண்டும். செப்டிக் டேங்க் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தன.

    விரைவில் இந்த கோரிக்கை களை நிறை வேற்றி தருவதாக அசோக்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, கவுன்சிலர்கள் ஜெயராமன், மகேந்திரன், சோக்காடி ஊராட்சி மன்ற தலைவர் கொடிலா ராமலிங்கம், துணைத் தலைவர்கள் ராஜசேகர், நாராயணகுமார், வங்கித் தலைவர் சூர்யா, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×