என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவகிரி பேரூராட்சியில் இருந்து கவுன்சிலர்கள் 10 பேர் வெளிநடப்பு
- சிவகிரி பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
- கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஏற்கனவே கவுன்சிலர்கள் அளித்த தீர்மானங்கள் நிறை வேற்றவில்லை என்றும் புதிய தீர்மானங்கள் கவுன்சிலர்களின் ஒப்புதல் இன்றி நிறை வேற்றப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
இதை கண்டித்தும், மேலும் கவுன்சிலர்களின் வார்டு பணிகள் புறக்கணிக்கப்படு வதாகவும் கூறியும் நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலு வலரிடம் கவுன்சிலர்களின் எதிர்ப்பை மன்றத் தீர்மான புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதில் தி.மு.க. கவுன்சி லர்கள் 7 பேர், அ.தி.மு.க. னவுன்சிலர் ஒருவர், பாரதிய ஜனதா கட்சி கவுன்சிலர் ஒருவர், சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 10 கவுன்சிலர்கள் அனைத்து தீர்மானங்களு க்கும் எதிர்ப்பு தெரிவித்து செயல் அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக மனு அளித்துள்ளனர்.
கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் சிவகிரி பேரூராட்சி பர பரப்புடன் காணப்பட்டது.