search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
    X

    பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகளை படத்தில் காணலாம்.

    2 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

    • சப்-இன்ஸ்பெக்டர் மேனகா 2 காதல் ஜோடிகளின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • காதல் தம்பதியர் மணமகன் வீட்டிற்கு சென்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பச்சமலையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பூமணிகண்டன் (25). டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் மளிகை பொருட்கள் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூரை சேர்ந்தவர் முத்துகுமார். டீ கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஜனனிபிரியா (21) கோபியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் ஜனனி பிரியாவுடன், பூமணிகண்டனின் தங்கையும் படித்து வருவதால் ஜனனிபிரியா அடிக்கடி பூமணிகண்டன் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

    இதனால் ஜனனிபிரியா, பூமணிகண்டன் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளப்பியது.

    அதைத்தொடர்ந்து காதலர்கள்2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி பச்சமலையில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    இதேபோல் புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி மகள் ராகவி (18). இவர் காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நஞ்சப்பன் மகன் பன்னீர்செல்வம் (23). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு பெரிச்சிகவுண்டன் புதூரில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக உள்ளார்.

    இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி இருவரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதில் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும், இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் அந்தஸ்து காரணமாக இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    அதைத்தொடர்ந்து காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோபி அருகே உள்ள பவளமலையில் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    அதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மேனகா 2 காதல் ஜோடிகளின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதில் மணமகன்களின் பெற்றோர் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து காதல் தம்பதியர் மணமகன் வீட்டிற்கு சென்றனர்.

    Next Story
    ×