search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    25 ஆயிரத்து 591 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு எழுதுகின்றனர்
    X

    கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    25 ஆயிரத்து 591 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு எழுதுகின்றனர்

    • எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 358 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
    • தேர்வு எழுதுவதற்கு 119 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதியுடனும், பிளஸ்-1 பொதுத்தேர்வு 5-ந் தேதியுடனும் நிறைவு பெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 358 பள்ளிகளை சார்ந்த 25,591 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இவர்களுக்கு தேர்வு எழுத வசதியாக 113 தேர்வு மையங்களும்,

    தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக 6 மையங்கள் என மொத்தம் மாவட்டத்தில் 119 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்திற்கு எஸ்.எஸ்.எல்.சி வினாத்தாள் ஈரோடு உட்பட மாவட்டத்தில் 7 கட்டுப்பாட்டு மையத்தில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வினாத்தாள் மையத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராவும் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கு ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் உள்ள யு.ஆர்.சி. பள்ளி, கோபியில் உள்ள குருகுலம் பள்ளி, சத்தியமங்கலத்தில் ராகவேந்திரா பள்ளி என 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை தேதி அறிவித்ததும் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்படும். தேர்வுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளதால் தேர்வுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×