என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் 69.58 சதவீதம் வாக்குப்பதிவு
- பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பதவி, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 7 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.
- இதைத்தொடர்ந்து வரும் 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பதவி, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகள் 14 என 16 பதவிகள் காலியாக உள்ளன. இப்பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 7 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.
இதன்படி, அம்மா–பேட்டை யூனியன் சிங்கம் பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்–2ல் இருவர், பவானி யூனியன் பெரியபுலியூர் வார்டு எண்–3ல் நால்வர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–3ல் இருவர், கோபி யூனியன் கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–1ல் இருவர், மொடக்குறிச்சி யூனியன் 46புதுார் பஞ்சாயத்து வார்டு எண்–1ல் நால்வர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–3ல் மூவர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–2ல் மூவர் என, 7 பதவிக்கு, 20 பேர் போட்டியிட்டனர்.
டவுன் பஞ்சாயத்து பதவிக்கு மட்டும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரமும், பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு ஓட்டுச்சீட்டும் பயன்படுத்தப்பட்டது. காலை, 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது.
கொரோனா பரவல் தடுப்பு நெறிமுறைப்படி, வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் ஓட்டுச்சாவடிக்கு வந்தனர். கிருமி நாசினியால் கைகள் சுத்தம் செய்து, ஓட்டுப்பதிவு செய்தனர். மொத்தம், 8 ஓட்டுச்சாவடியிலும் தலா ஒரு தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர் உட்பட தலா 6 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
அந்தந்த யூனியன் பி.டி.ஓ.க்கள் மற்றும் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக செயல்பட்டு, தேர்தல் நிறைவு பெற்றதும், அந்தந்த யூனியன் அலுவலகத்துக்கு ஓட்டுப்பெட்டியை எடுத்து சென்றனர்.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், இன்ஸ்பெக்டர் தலைமையில், 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
பஞ்சாயத்துக்கான 5 வார்டில், 64.01 சதவீதம், இரு டவுன் பஞ்சாயத்துகளில் 87.51 சதவீதம் என, 69.58 சதவீத ஓட்டுகள் பதிவானது.இதைத்தொடர்ந்து வரும் 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்