search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    90 சதவீதம் மாடுகள் விற்பனை
    X

    கருங்கல்பாளையத்தில் இன்று மாட்டுச்சந்தை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்த போது எடுத்த படம்.

    90 சதவீதம் மாடுகள் விற்பனை

    • கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து வருகிறது.
    • இன்று 90 சதவீதம் வியாபாரம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழ–க்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த சந்தைக்காக கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, நேபாளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம்.

    இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று நடந்த மாட்டு சந்தையில் 450 பசு மாடுகள், 200 எருமை மாடுகள், 50 வளர்ப்பு கன்றுகள் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. கடந்த வாரத்தை விட கூடுதலாக 50 மாடுகள் வந்துள்ளன.

    இன்று கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். பசுமாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரை விற்பனையானது.

    எருமை மாடு ஒன்று ரூ.30 முதல் 65 ஆயிரம் வரை விற்பனையானது. வளர்ப்பு கன்றுகள் 15 ஆயிரம் வரை விற்பனையானது. இன்று 90 சதவீதம் வியாபாரம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×