search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோலாரில் பஸ் நிலையம் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு
    X

    சோலாரில் பஸ் நிலையம் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு

    • சோலாரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது.
    • இந்த தற்காலிக பஸ் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 156 பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி மையப்பகுதியில் ஈரோடு பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறுகிய இடம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சூளை மற்றும் சோலாரில் 2 பஸ் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சோலாரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது.

    இந்த தற்காலிக பஸ் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 156 பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

    மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் முழுமையாக இந்த பஸ் நிலையத்தில் இருந்துதான் இயக்கப்பட உள்ளன.

    இதற்கான பணிகள் கடந்து சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த புதிய பஸ் நிலையத்தில் கடைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடம், நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறைகள் கட்டப்பட்டுள்ளன.

    கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. பஸ் நிலையத்தின் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டன. தற்போது பயணிகளுக்கு தேவையான குடிநீர் , நடைபாதை மற்றும் இருக்கைகள் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகின்றன.

    இந்த பணிகளும் முடிந்து இன்னும் 2, 3 வாரங்களில் பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×