search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ணாரியம்மன் கோவிலில் குவிந்த எரி கரும்புகள்
    X

    பண்ணாரியம்மன் கோவிலில் குவிந்த எரி கரும்புகள்

    • குண்டம் விழா 4-ந் தேதி அதிகாலை நடக்கிறது.
    • பக்தர்கள் எரிகரும்புகளை கோவிலில் காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    பண்ணாரி யம்மன் கோவில் குண்டம் விழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குவார்கள்.

    இந்தாண்டுக்கான பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    இதையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செயய்ப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    விழாவையொட்டி பண்ணாரியம்மன் சப்பரம் திருவீதி உலா நடந்தது. வீதிஉலா பல்வேறு கிராமங்க ளுக்கு சென்றது. அப்போது பக்தர்கள் புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து அம்மன் சப்பரம் மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா வருகிற 4-ந் தேதி (செவ்வா ய்க்கிழமை) அதிகாலை நடக்கிறது.

    இதில் லட்சக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பா ர்க்கப்படுகிறது. விழாவை யொட்டி முன்னதாக 3-ந் தேதி இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் வளர்க்கப்படுகிறது.

    இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    மேலும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறை வேற்றும் வகையில் எரிகரும்பு களை (விறகுகள்) கோவிலில் காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

    இதனால் கோவில் வளாகத்தில் எரி கரும்புகள் குவிந்து வருகிறது.

    Next Story
    ×