search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரியில் இருந்து ரோட்டில் கொட்டிய கரும்புகள்
    X

    ரோட்டில் கொட்டி கிடக்கும் கரும்புகள் அப்புறப்படுத்திய போது எடுத்த படம்.

    லாரியில் இருந்து ரோட்டில் கொட்டிய கரும்புகள்

    • லாரியில் இருந்த கரும்புகள் குவியலாக சரிந்து சாலையில் கொட்டியது.
    • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல்-அத்தாணி ரோட்டில் தினமும் ஆயிர க்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

    ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியில் இருந்து பவானி செல்லும் சாலை, அத்தாணி வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலை, கவுந்தப்பாடி செல்லும் சாலை மற்றும் அந்தியூர் செல்லும் சாலை என 4 வழி சாலைகள் இந்த பகுதியில் உள்ளன.

    ஆப்பக்கூடல் நால்ரோடு அருகே தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருவ தால் தினமும் லாரிகளில் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆப்பக்கூடல்- பவானி ரோட்டில் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது.

    அந்த லாரி ஆப்பக்கூடல் நால்ரோடு வந்து கவுந்தப்பாடி சாலை யில் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்த கரும்புகள் குவியலாக சரிந்து சாலையில் கொட்டியது.

    இதனால் நால்ரோடு வழியாக வந்து செல்லும் பள்ளி வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு உட னடியாக போலீசார் மற்றும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரியின் சார்பிலோ கரும்பு குவியலை அகற்ற யாரும் முன்வரவில்லை.

    நீண்ட நேரம் கழித்து ஆலையில் இருந்து ஜே.சி.பி. கொண்டு வரப்பட்டு ரோட்டில் கொட்டி கிடந்த கரும்பு குவியலை சாலையில் இருந்து ஓரமாக ஒதுக்கி விட்டனர். ஆனால் அந்த இடத்தில் இருந்து உடனடி யாக கரும்புகளை அப்புற ப்படுத்தவில்லை.

    இதனால் ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×