search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    X

    வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

    • ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குள்ளம்பாளையம் மற்றும் சீனாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் சத்துணவு மையத்தில் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு, ஜூலை. 6-

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குள்ளம்பாளையம் மற்றும் சீனாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பெருந்துறையில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் ரூ.51.50 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பாதாள சாக்கடை திட்ட வீட்டு இணைப்புகளுக்கு வழங்கும் பணி, பெருந்துறை தினசரி மார்க்கெட் பகுதியில் மூல தன நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் சந்தை மேம்பாடு செய்யும் பணி மற்றும் பெருந்துறை அக்ரகார வீதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதி திட்டத்தின் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் பொது அறிவு சார் மையம் மற்றும் நூலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.

    முன்னதாக பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் சத்துணவு மையத்தில் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் துடுப்பதி ஊராட்சியில் செயல்படுத்த ப்பட்டு வரும் 21 விவசாயிகளின் 17.15 ஏக்கர் தரிசு நிலங்களை கலெக்டர் பார்வையிட்டு திட்ட முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து ஆயிகவுண்டன்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.34.20 லட்சம் மதிப்பீட்டில் புதியகு ளம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து குள்ளம்பாளையம் அடுத்த மேட்டு ப்பாளையம் பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் ரூ.4.68 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.30 லட்சம் மதிப்பீட்டில் தனி நபர் உறிஞ்சி குழி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.37 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம்,

    ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் கழிப்பறை மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.6.79 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, குள்ளம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ரேசன் கடையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

    முன்னதாக கலெக்டர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த பேறு கால அறுவை சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவு ரத்த பரிசோதனை மையம் மருத்துவகிடங்கு மையம் மற்றும் கொரோனா சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது பெருந்துறை அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட சமூகநல அலுவலர் சண்முக வடிவு, பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பெருந்துறை வட்டா ரவளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×