search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்த பக்தர்கள்
    X

    பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்த பக்தர்கள்

    • பெண்கள் மாவிளக்கு எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான குண்டம் திருவிழா நாளை காலை நடைபெறுகிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி இரவு பூச்சாட்டு–தலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி ஆண்கள், பெண்கள் குண்டம்இறங்குவதற்காக மாலைஅணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.

    தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. குண்டம் திருவிழாவை யொட்டி குண்டத்துக்கு தேவையான விறகுகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தினர்.

    விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) காலை பெண்கள் மாவிளக்கு எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    இதில் கோபிசெட்டிபாளையம், சவுண்டப்பூர், புதுபாளையம், நல்ல கவுண்டன்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்நத ஏராள மான பெண்கள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து இன்று மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு குண்டம் வளர்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையொட்டி கோவில் முன்பு குண்டத்துக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய விறகுகள் குண்டத்தில் போட்டு தீ பற்ற வைத்து குண்டம் வளர்க்கப்படுகிறது. விடிய, விடிய குண்டம் சரி செய்ய ப்படுகிறது.

    இதையொட்டி பக்தர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பே வந்து வரிசையில் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

    இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான குண்டம் திருவிழா நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நடை பெறுகிறது.

    முன்னதாக 50 அடி குண்டத்தில் முதன்முதலாக தலைமை பூசாரி ஆனந்த் என்பவர் குண்டம் இறங்கி தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்குவார்கள்.

    மேலும் 13-ந் தேதி மாலை 4 மணி அளவில் தேர் திருவிழா நடை பெறுகிறது. 14-ந் தேதி மலர் பல்லக்கு நடைபெற உள்ளது.

    அன்று இரவு 11 மணி அளவில் மலர் பல்லக்கு பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு அம்மன் மலர் பல்லக்கில் கோபி பெரு மாள் கோவிலை வந்து அடைகிறது.

    அதைத் தொடர்ந்து 15-ந்தேதி கோபியில் தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற உள்ளது. 21-ந் தேதி சனிக்கிழமை மறுபூஜை விழா நடக்கிறது.

    விழாவையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு கனகேஸ்வரி தலை மையில் 2 டி.எஸ்.பிக்கள், 13 இன்ஸ்பெக்டர் கள், 93 சப்-இன்ஸ்பெக்டர்கள், 532 போலீசார், 80 ஊர்க்காவல் படை வீரர்கள் என 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×