search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்குவாரி உரிமையாளர்கள் 4-வது நாளாக போராட்டம்
    X

    கல்குவாரி உரிமையாளர்கள் 4-வது நாளாக போராட்டம்

    • கல்குவாரி கிரசர் மணல் மற்றும் குவாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • தமிழகம் முழுவதும் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது

    பெருந்துறை,

    தமிழ்நாடு கல்குவாரி கிரசர் மணல் மற்றும் குவாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2016-ம் ஆண்டு நடை முறையில் உள்ள சிறு கனிம விதிகளை பெரும் கனிம விதிகளுடன் சேர்த்தது. கல் குவாரியில் அனைத்து அதிகாரிகளும் ஆய்வு செய்த பின்பு அனுமதி வழங்கப்பட்ட குவாரிக்கு தனிநபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் குவாரியை இயங்க விடாமல் அதிகாரிகள் அனுமதி மறுப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற பெயரில் பணம் பறிக்கும் நோக்கத்தில் தொழிலை நடத்த விடாமல் செய்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்ற ப்பட்டது.

    தமிழக அரசும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் முழு வதும் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கல் குவாரி கள் மற்றும் கிரசர் மணல் குவாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சரளை பகுதியில் கிரஷர் லாரி உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டம் முழுவதும் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கட்டுமான பணிகள் சார்ந்த தொழிலாளர்களுக்கும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×