என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முருகன், மாரியம்மன் கோவில்களில் உண்டியல் உடைத்து கொள்ளை
- நள்ளிரவில் கோவிலுக்கு வந்தமர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்துஅதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் கோவிலில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று தேடிப்பார்த்து உள்ளனர்.
- மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மூலப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற முருகன், மாரியம்மன் கோவில்கள் அருகருகே உள்ளது.இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.கோவில் தினமும் காலை திறக்கப்பட்டுஇரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும். அதே போல்நேற்று இரவும் பூசாரி கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றார்.
நள்ளிரவில் கோவிலுக்கு வந்தமர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்துஅதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் கோவிலில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று தேடிப்பார்த்து உள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை பூசாரி வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த போது 2 கோவில்களின் உண்டியல்கள்உடைக்க ப்பட்டு அதில்இருந்த காணிக்கை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொள்ளை நடந்த கோவிலுக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உண்டியல் மற்றும் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரு. 20 ஆயிரமும், முருகன் கோவில் உண்டியலில் ரு. 5 ஆயிரமும் இருந்தது தெரியவந்தது. மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.