என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கஞ்சா விற்ற வட மாநிலத்தவர் கைது
- சிப்காட், 2-வது கிராசில் உள்ள கேஸ் கம்பெனி அருகே ஒரு நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது
- அவர் வைத்திருந்த ரூ. 1,500 மதி ப்பிலான 150 கிராம் கஞ்சா வையும் பறிமுதல் செய்தனர்
ஈரோடு
அரசால் தடை செய்ய ப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி பெருந்துறை போலீசார் நேற்று தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுப ட்டிருந்தனர்.
அப்போது சிப்காட், 2-வது கிராசில் உள்ள கேஸ் கம்பெனி அருகே ஒரு நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்ற போது, அவர்களைக் கண்ட தும் தப்பியோட முயன்ற ஒரு நபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் பீகார் மாநி லம், பால்தியா மாவட்டம், கோதை பாஹ் பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் மன்சூரி (வயது 21) என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட சோதனை யில், அவர் 150 கிராம் கஞ்சா வைத்திரு ந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த ரூ. 1,500 மதி ப்பிலான 150 கிராம் கஞ்சா வையும் பறிமுதல் செய்தனர்.