search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

    • வேலை வாய்ப்பு முகாம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 19-ந் தேதி நடத்தப்பட உள்ளது.
    • இம்முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம், ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் வரும் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட உள்ளது.

    இம்முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இவ்வேலை வாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரி கள், பட்டய ப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, தொழில் கல்வி பெற்ற வர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்கு பவர்கள், தையல் கற்றவ ர்கள் என அனைத்து வித தகுதியுள்ள மாற்றுத்திற னாளி, வேலை நாடுநர்களும் கலந்து கொள்ளலாம்.

    முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவ சமானதாகும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு க்கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி களுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்க ளுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழி காட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம், வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே தனியார் துறை யில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைத்து மாற்றுத்தி றனாளிகளும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிய மர்த்தம் செய்யப்படும் வேலை நாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுஎண் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் கலெக்டர் கிருஷ்ணணுண்ணி தெரிவித்துள்ளார்.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் மற்றும் ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 9499055942, 94990 55943, 04242275860 அல்லது மின்னஞ்சல் முகவரி: erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    Next Story
    ×