search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பரமேஸ்வரன், பொதுச்செயலாளர் தெய்வ சிகாமணி, பொருளாளர் சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் நலப் பணியாளர்கள் நல வாழ்வு கூட்டமைப்பு, தமிழ்நாடு மாநில மையம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் திரண்டு வந்து கோர்ட்டு தீர்ப்பின் அடிப்ப டையில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பரமேஸ்வரன், பொதுச்செயலாளர் தெய்வ சிகாமணி, பொருளாளர் சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

    மக்கள் நலப்பணி யாளர்கள் சம்பந்தமாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள ஆணையை ரத்து செய்யக்கோரியும், கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நலப் பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச்செயலாளர் தெய்வ சிகாமணி ஆகியோர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நல பணியாளர்கள் மொத்தம் 214 பேர் உள்ளனர். கல்வித்தகுதி அடிப்படையில் காலிப்பணி யிடங்களை மக்கள் நலப் பணியாளர்களை கொண்டு நிரப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்ற அரசு ஊழியர்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறதோ அதை அவர்களுக்கு வழங்க கூறியுள்ளது.

    தற்போது அரசு பிறப்பி த்துள்ள உத்தரவில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக மக்கள் நலப் பணியா ளர்களை பணியமர்த்த முடிவு எடுத்துள்ளது. இதன்படி தொகுப்பு ஊதியமாக ரூ.7500 மட்டும் கிடைக்கும். இந்த பணம் எங்களுக்கு காணாது.

    தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்கப்படுவதாக அரசாணை வந்துள்ளது. வயது முதிர்ந்தவர்கள் உள்ளனர். பலர் பட்டப்படிப்பு, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி படித்துள்ளார். கல்வித்தகுதி அடிப்படையில் நீதிமன்றம் கூறியபடி நிரந்தர பணியிடம் வழங்க வேண்டும். அப்போது தான் வருங்காலத்தில் பணியிலிருந்து எந்த அரசாலும் நீக்க முடியாது. இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவர் அவர்கள் கூறினர்.

    Next Story
    ×