என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலையில் குவிந்துள்ள மணல்
- தாளவாடி யில் இருந்து தலமலை செல்லும் வனச்சாலை நெய்தாளபுரம் அருகே காட்டாற்று வெள்ளம் சாலையை மூழ்கடித்து சென்றது.
- தற்போது வெள்ளம் வடிந்த பிறகு சாலையில் மணல் குவியல் குவியலாக குவிந்துள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குளம், குட்டைகள் நிரம்பி வழிகிறது.
அதேப்போல தொடர் மலை காரணமாக விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் விவசாய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தாளவாடி யில் இருந்து தலமலை செல்லும் வனச்சாலை நெய்தாளபுரம் அருகே காட்டாற்று வெள்ளம் சாலையை மூழ்கடித்து சென்றது.
தற்போது வெள்ளம் வடிந்த பிறகு சாலையில் மணல் குவியல் குவியலாக குவிந்துள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமலும், கீழே விழுந்து அடிபடுவதும் நடந்து வருகிறது.
எனவே சாலையில் குவிந்துள்ள மணலை அப்பு றப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.