search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம்
    X

    சென்னிமலை பேரூராட்சி 2-வது வார்டு பகுதியில் லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    பொதுமக்களுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம்

    • தண்ணீர் தேவை உள்ள வார்டு பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இன்னும் 3 நாட்களில் பணி நிறைவு பெற்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னிமலை:

    சென்னிமலை பேரூரா ட்சியில் 15 வார்டுகள் உள்ளது. மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

    நாள் ஒன்றுக்கு இந்த திட்டத்தில் 22 லட்சம் லிட்டர் தண்ணீர் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணம் செலுத்தி பெற்று மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

    வழக்கமாக சென்னிமலை நகர பகுதிக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை தான் வீடுகளுக்கு குடிநீர் சப்பளை செய்யப்படு கிறது.

    மக்கள் பல முறை கோரிக்கை வைத்த பின்பு கடந்த 6 மாதங்களாக வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 20 நாட்க ளுக்கு மேலாக குடிநீர் சப்பளை செய்யப்பட வில்லை.

    வசதியானவர்கள் லாரி தண்ணீர் வாங்கி பயன்ப டுத்தி கொள்கின்றனர். ஏழைகள் குடிநீருக்காக மிகவும் கஷ்டபடுகிறார்கள்.

    மேலும் 15 வார்டு பகுதியில் சவரத் தொழிலாளர்கள் காலனியில், சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக லாரி தண்ணீர் வாங்கி பொதுமக்களுக்கு வீடுகளுக்கு 30 குடம் என வழங்கி உள்ளனர்.

    குடிநீர் விநியோகம் செய்யாததால் வார்டு கவுன்சிலர்கள் தெருவில் செல்ல முடியவில்லை என கூறி புலம்பி வருகின்றனர்.

    இது குறித்து பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக்யிடம் கேட்ட போது கூறியதாவது:

    ஈங்கூர் ரெயில்வே லைன் அடியில் மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டு விட்டது. இதை சரி செய்ய மத்திய ரெயில்வே துறையில் உரிய அனுமதி வாங்கி போர்கால அடிப்படையில் பணிகள் நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு மேல் பணி செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், ரெயில்வே அதிகாரிகள் உடன் வைத்து பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் பணி நடந்து வருகிறது.

    இன்னும் 3 நாட்களில் பணி நிறைவு பெற்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தண்ணீர் தேவை உள்ள வார்டு பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் லாரி மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது என்றார்.

    Next Story
    ×