search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடங்கியது
    X

    8 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடங்கியது

    • நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று தொடங்கியது.
    • இந்த தேர்வு முதல் முறையாக கணினி வழியில் நடத்தப்பட்டது.

    ஈரோடு, அக். 14-

    தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு சேர்வதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இதன்படி நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வானது ஈரோடு அடுத்த கருந்தேவன்பாளையம் அல்-அமீன் பொறியியல் கல்லூரி, துடுப்பதி செங்குந்தர் பொறியியல் கல்லூரி, டி.என்.பாளையம் ஜே.கே.கே.பொறியியல் கல்லூரி, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி, கோபி பி.கே.ஆர்., கலை கல்லூரி, தாசம்பாளையம் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, திண்டல் வி.இ.டி. கலை கல்லூரி என 8 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடங்கியது.

    இந்த தேர்வினை மாவட்டம் முழுவதும் 12,660 பேர் எழுத உள்ளனர். ஒவ்வொரு மையங்களிலும் கண்காணிப்பாளர்கள், கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் உதவியாளர் (ஸ்கிரைப்) மூலம் தேர்வு எழுதினர். காலை முதலே தேர்வர்கள் அந்தந்த தேர்வு மையத்திற்கு ஆர்வத்துடன் வந்தனர்.

    இந்த தேர்வு முதல் முறையாக கணினி வழியில் நடத்தப்பட்டது. இதற்காக என்ஜினீயர் கல்லூரியில் உள்ள கணினி வகுப்புகள் தேர்வு மையங்களாக மாற்றப்பட்டிருந்தன. காலை, பிற்பகல் என 2 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படுகிறது.

    இன்று தொடங்கி வரும் 20-ந் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. முறைகேடுயின்றி தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    Next Story
    ×