என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செல்போனை அடகு வைத்து மது குடித்த மகனை அடித்துக்கொன்ற தந்தை
- திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்தார்.
- பெற்றோரிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஆப்பக்கூடல்,
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வானி பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே நேற்று அதிகாலை 35 வயது மதிக்கதக்க வாலிபரின் உடல் கிடப்பதாக ஆப்பக்கூடல் கிராம நிர்வாக அலுவலருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
கிராம நிர்வாக அலுவலரின் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்த வாலிபர் யார்? இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி கொண்டிருக்கையில் அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்து நின்றுள்ளது.
ஆட்டோவில் இறங்கி வந்த நபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததால் அங்கிருந்த போலீசார் விசாரித்த போது தனது பெயர் ராஜாமணி என்றும் இறந்து கிடப்பது தனது மகன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தனது மகன் காணாமல் போனதால் தேடி வந்ததாக முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் ராஜாமணியின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (58). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது ஒரே மகன் சிவானந்தம் (33). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
ராஜாமணி கோபிசெட்டி பாளையம் பஸ் நிலையத்தில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார், இவரது மகன் சிவானந்தம் 10-ம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்தார்.
இதற்கிடையே சிவானந்தம் குடிப்பழக்க த்திற்கு அடி மையானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி குடித்து விட்டு எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊர் முழுவதும் கடன் வாங்கி வைத்துக்கொண்டு குடித்து விட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்வதை வாடி க்கையாக வைத்துள்ளார்.
மேலும் பணம் கிடைக்காத பட்சத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சென்று அடமானம் வைத்தும் குடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி குடிப்பதற்கு பணம் இல்லாததால் ராஜா மணியின் செல்போனை எடுத்துக் கொண்டு சென்று அடமானம் வைத்து குடித்து விட்டு இரவு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ராஜாமணி செல்போனை எடுத்துக்கொண்டு சென்று அடமானம் வைத்து குடிக்கும் அளவிற்கு ஆளாகி விட்டாய் என கூறி மகன் சிவானந்தத்தை கண்டித்து உள்ளார்.
மேலும் சிவானந்தம் மதுபோதையில் படுத்து இருந்த போது வீட்டில் இருந்த இரும்பு பைபால் தலை, கால் உள்ளிட்ட பல இடங்களில் பலமாக ராஜாமணி தனது மகனை தாக்கியுள்ளார். இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக முடியாமல் வீட்டிலேயே சிவானந்தம் உடல் நலக்குறைவில் கிடந்துள்ளார், மேலும் வழி தாங்க முடியாமல் கத்தி அலறியுள்ளார் சிவானந்தம்.
சத்தமிட்டு கத்தி உயிருக்கு போராடிய மகன் சிவானந்தத்தை அருகில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நஞ்சகவுண்டன் பாளையத்தில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வானி பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே சென்று ராஜாமணி வீசி விட்டு சென்று விட்டார்.
உடல் நிலை பாதிக்கப்பட்டு கிடந்த சிவானந்தம் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. போலீசார் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆப்ப க்கூடல் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ராஜாமணியை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்