search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போன் மூலம் பேசி கஞ்சா கும்பலை மடக்கிய போலீசார்
    X

    போன் மூலம் பேசி கஞ்சா கும்பலை மடக்கிய போலீசார்

    • தனிப்படை போலீசார் டி.ஜி.புதூரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
    • தலைமறைவான பவானியை சேர்ந்த கஞ்சா வியாபாரி செந்திலை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் காளியூர் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா கடத்தப்படுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் தனிப்படை போலீசார் டி.ஜி.புதூரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ஒரு பாலிதீன் கவரில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் காரில் 3 பேர் இருந்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் டி.ஜி.புதூர், கே.என்.பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த முத்து என்பவர் மகன் சதீஸ் (19), சத்தியமங்கலம் ரங்க சமூத்திரம் ஆர்.எம்.பி நகரை சேர்ந்த மோகன் என்பவர் மகன் பிரபு (26), சிக்க ரசம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மகன் ரஞ்சித் (26) எனவும், விற்பனை செய்ய காரில் கஞ்சா கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கைதான 3 பேரும் பெருமுகை கிராம த்திற்குட்பட்ட வரப்பள்ளம் என்ற இடத்திற்கு சென்று,பவானி அருகே உள்ள எலவமலை அண்ணாநகரை சேர்ந்த ராஜசேகரன் (47), நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் அருகே உள்ள புதுபள்ளிபாளையம் தியேட்டர் வீதி, மரக்கல்காடு பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவரது மகன் கிருபாகரன் (28),

    பெருந்துறை அருகே உள்ள சென்னிவலசு புளிக்கார தோட்டத்தை சேர்ந்த ஜெயராஜ் மகன் பிரகாஷ் என்கிற ஜெயபிரகாஷ் (34) ஆகியோரிடம் இருந்து விற்பனைக்காக கஞ்சா வாங்கி வந்ததாக கைதான 3 பேரும் தெரிவித்தனர்.

    இதில் பெரிய கஞ்சா கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து பங்களாப்புதூர் போலீசார், கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க, பிடிபட்ட சதீஸ் மூலமாக ராஜசேகர், கிருபாகரன், பிரகாஷ் என்ற ஜெயபிரகாஷ் ஆகியோரை தொடர்பு கொண்டு மீண்டும் விற்பனைக்கு கஞ்சா தேவை என கூறி போலீசார் கஞ்சா கும்ப லுக்கு வலை விரித்தனர்.

    அதை நம்பிய ராஜசேகரன், கிருபாகரன் மற்றும் பிரகாஷ் என்ற ஜெயபிரகாஷ் ஆகிய 3 பேரும் 3 மோட்டார் சைக்கிள்களில் வரப்பள்ளம் அருகேயுள்ள இரட்டை பாலம் அருகே 5 கிலோ கஞ்சாவுடன் காத்திருந்தனர்.

    அவர்கள் கஞ்சாவுடன் வந்திருப்பதை உறுதி செய்த பங்களாப்புதூர் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் தனிப்படை போலீ சார் உடனடியாக அங்கு சென்று கஞ்சாவுடன் காத்திருந்தவர்களை பிடிக்க முயன்றனர்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த 3 பேரும் போலீ சாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து அவர்களது இருசக்கர வாகனங்களை சோதனை செய்த போது 3 பேரிடமும் மொத்தம் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து ராஜசேகரன், கிருபாகரன் மற்றும் பிராகாஷ் என்ற ஜெயபிரகாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் அதிர டியாக கைது செய்தனர்.

    மேலும் போலீசார் விசாரணையில் பவானி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த மாரசாமி மகன் செந்தில் என்ற அரைப்பல் செந்தில் (47) என்ற பிரபல கஞ்சா வியாபாரியிடம் இருந்து கஞ்சாவை விற்பனைக்காக வாங்கி வந்தது தெரி யவந்தது.

    அதைத்தொடர்ந்து செந்தில் என்ற அரைப்பல் செந்திலை பிடிக்க போலீ சார் பவானி சென்ற போது செந்தில் தலைமறைவாகி விட்டார்.

    ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சதீஸ், பிரபு, ரஞ்சித், உட்பட ராஜசேகரன், கிருபாகரன் மற்றும் பிரகாஷ் என்ற ஜெய பிரகாஷ் ஆகிய 6 பேரையும் சட்ட விரோதமாக கஞ்சா வாங்கி விற்பனை செய்த குற்ற த்திற்காக கைது செய்ய ப்பட்டனர்.

    இந்த கஞ்சா கும்பலிடம் இருந்து போலீசார், சுமார் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா, 6 செல்போன், 3 இரு சக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் ரூ.17 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஏற்கனவே கைதான 3 பேர் உட்பட 6 பேரும் கோபி செட்டிபாளையம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டனர்.

    இதையடுத்து தலைமறைவான பவானியை சேர்ந்த கஞ்சா வியாபாரி செந்திலை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×