search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேரன்மகாதேவியில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை  பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி
    X

    சப்-கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம், பயனாளி ஒருவருக்கு இடுபொருட்கள் வழங்கிய காட்சி.

    சேரன்மகாதேவியில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி

    • விழாவில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 300 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    • சேக் அப்துல்லா,அம்பை சங்கர நாராயணன் ஆகியோர் இயற்கைவழி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.

    சேரன்மகாதேவி:

    சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி விழா சேரன் மகாதேவி ஸ்காட் பொறியி யல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.

    விழாவில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 300 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் சுபசெல்வி வரவேற்று பேசினார். நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முருகா னந்தம் விழாவின் நோக்கம் குறித்து பேசினார்.

    சேரன்மகாதேவி சப்- கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம் கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்துவம், பயன்பாடுகள் குறித்து தலைமையுரையாற்றி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பயனாளிகளுக்கு இடு பொருட்கள் வழங்கினார்.

    சேரன்மகாதேவி ஒன்றிய குழுத் தலைவர் பூங்கோதை குமார் மற்றும் பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன் வாழ்த்துரை வழங்கினர்.

    சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி பொது மேலாளர் தம்பிதுரை மற்றும் முதல்வர் ஜஸ்டின் திரவியம், நெல்லை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன், வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) அசோக்குமார், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய மாநில அரசு திட்டம்) ஜாய்லின் சோபியா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குநர் பூவண்ணன், விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜாதாபாய், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்ற ளிப்புத்துறை உதவி இயக்குநர் ரெனால்டா ரமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரி யர் மற்றும் தலைவர் ஆறுமுகசாமி, இணை பேராசிரியர்கள் ரஜினி மாலா, இளஞ்செழியன் ஆகியோர் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து தொழில்நுட்ப உரை ஆற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

    இயற்கை விவசாயி சேக் அப்துல்லா மற்றும் அம்பை சங்கர நாராயணன் ஆகியோர் இயற்கைவழி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.

    பாரம்பரிய பயிர்களை சந்தைப்படுத்துதல் குறித்து உள்ள விஸ்வநாதன் மற்றும் இயற்கை விவசாயி லெட்சுமி தேவி ஆகியோர் பேசினர்.

    சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் நன்றி கூறினார்.

    இக்கண்காட்சியில் நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துவரும் பாரம்பரிய நெல் பயிர் ரகங்கள், அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்த பதாகைகள், சர்வதேச சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு சிறுதானிய பயிர்கள் மற்றும் விழப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட்டது.

    மேலும் நெல் மற்றும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்த விற்பனை அங்காடி அமைக்கப்பட்டிருந்தது.

    விழாவிற்கான ஏற்பாடு களை நெல்லை மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) அலுவலர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×