என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை-தென்காசி இடையே நான்குவழிச்சாலை பணிக்கு குளத்து மண் சுரண்டல்? பொதுமக்கள் புகார்
- நெல்லை-தென்காசி இடையே 50 கிலோமீட்டர் தொலைவுக்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
- நெல்லை மாவட்ட கனிம வளத்துறை சார்பில் குளத்தில் மண் எடுக்க 11 மாதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம்:
நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இரு நகரங்களுக்குமிடையே உள்ள 50 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெறும் இந்த சாலை பணியானது மந்தமாக நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சாலை அமைக்க சரள் மண் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய நிலையில் இச்சாலையில் செம்மண் மற்றும் களிமண் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மண்ணை பயன்படுத்தினால் சாலையில் வழுக்கும் திறன் அதிகரிக்கும் அதன் மேல் தார் பயன்படுத்தினால் சாலையின் தரம் நீண்ட நாள்களுக்கு உழைக்காமல் போகக்கூடிய நிலை உருவாகும். இந்த மண், அருகில் உள்ள சாலையோரத்திலும், சிவலார்குளத்தில் உள்ள குளத்திலும் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத் தப்பட்டு வருகிறது.
இந்த குளத்தில் விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும் என அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் நெல்லை மாவட்ட கனிம வளத்துறை சார்பில் இக்குளத்தில் மண் எடுக்க 11 மாதம் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
தொடர்ந்து 11 மாதம் மண் எடுத்தால் கிராம வளம் பாதிக்கப்படும் என கிராம மக்கள் கவலையடைந்துள்ளனர். எனவே நான்கு வழிச்சாலைக்கு குளத்து மண்ணை பயன் படுத்தாமல் சரள் மண்ணை எடுத்து பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.