என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் நகரில் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல்
- திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மினிபஸ் சேவை இல்லாத கிராமங்களில் கூட ஷேர்ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- திண்டுக்கல்லில் மட்டும் நபர் ஒருவருக்கு ரூ.20 கட்டணம் வசூல் செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மினிபஸ் சேவை இல்லாத கிராமங்களில் கூட ஷேர்ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்புவரை நபர் ஒருவருக்கு ரூ.10 கட்டணம் வசூல் செய்யப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு சமயத்தில் ரூ.20 என கட்டணம் உயர்த்தப்பட்டது.
அதனைதொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் தற்போது வரை கூடுதல் கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் கூட குறைந்த அளவு கட்டணமே வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போதுவரை திண்டுக்கல்லில் மட்டும் நபர் ஒருவருக்கு ரூ.20 கட்டணம் வசூல் செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து டிரைவர்களிடம் கேட்டால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டது என காரணம் கூறுகிறார்கள். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச கட்டணம் இருந்தாலும் பெரும்பாலான வழித்தடங்களில் பஸ் இயக்கப்படாத கிராமங்களில் ஷேர் ஆட்டோக்களையே நம்பியுள்ளனர்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு செல்ல விரும்புபவர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் இந்த ஷேர் ஆட்டோக்களில்தான் செல்கின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திண்டுக்கல் போக்குவரத்து அதிகாரியிடம் கேட்டபோது, தமிழகத்தில் ஷேர்ஆட்டோ இயங்குவதற்கு கடந்த 2002-ம் ஆண்டு முதல் அனுமதி ரத்து செய்யப்பட்டு விட்டது. சாதாரண பயணிகள் ஆட்டோவுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. அதன்படி அனுமதி 1.8 கி.மீ தூரத்திற்கு நபர் ஒருவருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கவேண்டும். அதனைதொடர்ந்து ஒவ்வொரு கி.மீக்கும் ரூ.12 கட்டணம் வசூலிக்கவேண்டும்.
வெயிட்டிங் சார்ஜ் என்றால் ரூ.3.50 கட்டணம் வசூலிக்கவேண்டும். இதை தவிர கூடுதலாக யார் வசூல் செய்தாலும் அவர்கள் மீது போக்குவரத்து சட்டவிதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்