என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிவகிரி அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு வசதிகள் செய்துதர வேண்டும் -ஊர் பொதுமக்கள் சார்பாக மனு
Byமாலை மலர்20 Aug 2022 2:54 PM IST
- பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோவில் செயல் அலுவலரிடம் முறையிட்டனர்.
- ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் மனுவை செயல் அலுவலர் ஜெகநாதனிடம் அளித்தார்.
சிவகிரி:
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேவிபட்டணம் காளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கோவில் செயல் அலுவலர் ஜெகநாதனிடம் முறையிட்டனர்.
இதனைத்தொடர்ந்து செயல் அலுவலர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவோம் என்று உறுதி அளித்தார்.
எழுத்துப்பூர்வமான கடிதம் கேட்டு ஊர்பொதுமக்களின் சார்பாக தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் மனுவை செயல் அலுவலர் ஜெகநாதனிடம் அளித்தார். இதனையடுத்து மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story
×