என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உழவர் சந்தையில் விரைவில் இடுபொருட்கள் விற்பனை அரங்கு - துணை இயக்குனர் தகவல்
- உழவர் சந்தையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்படி தோட்டக்கலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
- இந்த விற்பனை அரங்கில் விதை, நாற்றுக்கள், மாடி தோட்ட விதைகள், மண்புழு உரம் உள்பட பல்வேறு இடுபொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருக்கும்.
தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோ ட்டை சாலையில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தையில் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள கடைகள் அருகே உள்ள கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து உழவர் சந்தையில் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் பணிகள் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று காலை உழவர் சந்தை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதனை தொடர்ந்து 55 கடைகள் இன்று செயல்பட்டன. அதில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் 15.8 டன் அளவுக்கு காய்கறி, பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.இந்த நிலையில் உழவர் சந்தையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் றிவுறுத்தல்படி தோட்ட க்கலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இதனை தொடர்ந்து தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் உழவர் சந்தையில் ஆய்வு செய்தார். தோட்டகலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை அரங்கு அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது அவர் கூறும்போது:-
வேளாண் துறை அமைச்சர் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் தேர்ந்தெ டுக்கப்பட்ட உழவர் சந்தைகளில் தோட்ட க்கலை துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை அரங்கு அமைக்கப்பட உள்ளது. அதில் தஞ்சாவூர் உழவர் சந்தையும் ஒன்றாகும். இந்த விற்பனை அரங்கில் விதை, நாற்றுக்கள், மாடி தோட்ட விதைகள், மண்புழு உரம் உள்பட பல்வேறு இடுபொருட்கள் விற்பனைக்காக வைக்க ப்பட்டு இருக்கும். விரை வில் இந்த உழவர் சந்தையில் இடுபொருட்கள் விற்பனையகம் தொட ங்கப்பட உள்ளது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்