என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மானியம் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அழைப்பு
- முன்னுரிமை அடிப்படையில் திட்டங்களை விவசாயிகள் இதுவரை பெற்று வந்தனர்.
- தோட்டக்கலைத்துறையில் திட்டங்களுக்கு மானியம் பெற விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்க லைத்துறை உதவி இயக்குநர் கோதைநாயகி வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-
தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களில் பயன் பெறுவதற்கு, உழவன் செயலியில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் திட்டங்களை விவசாயிகள் இதுவரை பெற்று வந்தனர்.
சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு மட்டுமே இணைய தளத்தில் பதிவு செய்து பயன்பெறும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு ஆண்டு 2022-2023 -ல் அனைத்து விவசாயிகளும் இணையதளத்தில் https://tnhorticulture.tn.gov.in என்ற முகவரியை பயன்படுத்தி பதிவு செய்தால் மட்டுமே மானியம் பெற இயலுமென தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
எனவே, பெத்தநா யக்கன்பாளையம் வட்டாரத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கண்ட இணையதள முகவரியை பயன்படுத்தி தோட்டக்கலைத்துறையில் திட்டங்களுக்கு மானியம் பெற விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.