என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயனடைய வேண்டுகோள்
- புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத்திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு விவசாயிகளை நாமக்கல் கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- மேலும் தோட்டக்கலை பயிர்களான சிறிய வெங்காயம்-II பயிருக்கு பிரிமியத்தொகையாக ஏக்கருக்கு ரூ.1,990.82-யை 30.11.2022-க்குள் செலுத்த வேண்டும்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி, கபிலர்மலை, மோகனூர், நாமக்கல் வட்டாரத்தில் 2022-23-ம் ஆண்டு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் நெல்-II (சம்பா) மற்றும் சிறிய வெங்காயம்-II பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத்திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட விவசாயிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி, பிரிமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நெல்-II (சம்பா) பயிருக்கு ரூ.337.16-யை 15.12.2022-க்குள் செலுத்த வேண்டும். மேலும் தோட்டக்கலை பயிர்களான சிறிய வெங்காயம்-II பயிருக்கு பிரிமியத்தொகையாக ஏக்கருக்கு ரூ.1,990.82-யை 30.11.2022-க்குள் செலுத்த வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் இதர வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.
கடன் பெறாத விவசாயி கள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் உள்ள வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோடு எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடர்பான மேலும் கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் ஆகியோரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்