என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
- வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் 1 கிலோ ரூ.12க்கு விற்பனையாகிறது. இதனால் முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- விதை, உரம், உழவு, நடவு கூலி, செடிகளுக்கு மருந்து, வண்டி வாடகை, கமிசன் போன்ற பல்வேறு செலவுகளை சமாளித்து விற்பனைக்கு கொண்டு வந்தால் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெ ட்டிற்கு அம்பிளிக்கை, அரசபிள்ளைபட்டி, கேதையரும்பு, கீரனூர், சாமியார்புதூர், காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து முருங்கை, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக இந்த கிராமங்க ளில் செடி முருங்கை அதிக அளவு விளைவிக்கப்படு கிறது.
விளைச்சல் அதிகரித்து ள்ளதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே 1 கிலோ ரூ.12க்கு விற்பனையாகிறது. இதனால் முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தாங்கள் உற்பத்தி செய்த செலவு கூட கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்து ள்ளனர்.
முருங்கைக்காயை பறித்து எடுக்க நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.400 கூலி கொடுக்க வேண்டியு ள்ளது. விதை, உரம், உழவு, நடவு கூலி, செடிகளுக்கு மருந்து, வண்டி வாடகை, கமிசன் போன்ற பல்வேறு செலவுகளை சமாளித்து விற்பனைக்கு கொண்டு வந்தால் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே முருங்கைக்கு நிரந்தர விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் கடந்த மாதம் வரை 1 கிலோ தக்காளி ரூ.100 மற்றும் அதற்கும் மேல் விற்பனையானது. வரத்து குறைவால் விலை அதிகரித்த நிலையில் தற்போது விலை குறைந்து வருகிறது. 14 கிலோ கொண்ட 1 பெட்டி ரூ.700க்கு விற்பனையாகிறது. 1 கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை கொள்முதல் செய்யப்படு கிறது. தற்போது தக்காளி செடிகளில் பூக்கள் பூத்துள்ள சமயத்தில் மழை பெய்து ள்ளதால் விலை மீண்டும் அதிகரிக்கும் என விவ சாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதத்தை ஒப்பிடும் போது தக்காளி விலை குறைந்து வருவதால் இது மேலும் விலை குறையும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆவணி மாதம் முகூர்த்த நாட்கள் அதிகரிக்கும் என்பதால் காய்கறிகளின் தேவையும் கூடும். அந்த சமயத்தில் பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்து வருவது விவசாயிகளை வருத்த மடைய வைத்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்