search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் பாரம்பரிய ரகங்களின் விதைகளை வாங்கி பயன்படுத்தி லாபம் பெறலாம்
    X

    விவசாயிகள் பாரம்பரிய ரகங்களின் விதைகளை வாங்கி பயன்படுத்தி லாபம் பெறலாம்

    • கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.
    • கருடன் சம்பா தலா 200 கிலோவும், மாப்பிள்ளை சம்பா 100 கிலோவும் மதுக்கூர் வட்டாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்றுள்ளது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் பகுதிவேளாண் உதவி இயக்குனர் திலகவதி செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது,

    தமிழகத்தில் உள்ள வேளாண் பெருமக்களின் நலன் காத்து வருவாயை பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    குறிப்பாக மரபுசார் ரகங்களை பாதுகாக்கும் வகையில் 21- 22 ம் நிதி ஆண்டில் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் எனும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.

    அதன்படி அறுபதாம் குறுவை, ஆத்தூர் கிச்சிலி சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, கருடன் சம்பா, கருங்குருவை, கருப்பு கவுனி, கீரை சம்பா, கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது என்பதால் இந்த மரபு சார் நெல் ரகங்களை திரட்டி பல மடங்காக பெருக்கி விவசாயிகளுக்கு விநியோகம் செய்து அதிக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் 33 அரசு விதைப் பண்ணைகளில் 15 பாரம்பரிய நெல் ரகங்களை 200 டன் அளவு உற்பத்தி செய்துள்ளது.

    இவ்வாறு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாக்கோட்டை அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பு கவுனி, கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா ஆகிய ரகங்களில் கருப்பு கவுனி மற்றும் கருடன் சம்பா தலா 200 கிலோவும், மாப்பிள்ளை சம்பா 100 கிலோவும் மதுக்கூர் வட்டாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்றுள்ளது.

    ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் மட்டுமே விவசாயிக்கு வழங்கப்பட உள்ளதுமதுக்கூர் வட்டாரத்தில் முன்னுரிமை அடிப்படையில் 20 விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் ஆர்வமுள்ள விவசாயிகள் உடன் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரை அணுகி அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

    மேற்கண்ட 3 பாரம்பரிய நெல் ரகங்களும் 50% மானியத்தில் ஒரு கிலோவுக்கு ரூபாய் 12.50 என்ற மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

    மரபுசார் நெல் ரகங்களை பாதுகாப்பதற்காக அமைச்சர் அறிவுரைப்படி வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் ஜஸ்டின் அறிவுரைபடியும் பாரம்பரிய விதை நெல்கள் உற்பத்தி செய்யப்பட்டு உண்மை நிலை விதைகளாக மரபு சார் நெல் ரகங்கள் இனத்தூய்மையுடனும் விதை தரத்துடனும் விநியோகம் செய்யப்படுவதால் விவசாயிகள் மானிய விலையில் விதைகளை பெற்று மரபுசார் நெல் ரகங்களை வருங்கால தலைமுறைக்கும் பயன்படும் வகையில் பாதுகாத்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    எனவே நமது மதுக்கூர் வட்டார விவசாயிகள் மேற்கண்ட பாரம்பரிய ரகங்களின் விதைகளை வாங்கி பயன்படுத்தி விதைகளை தங்களுக்கு என சேமித்து வைக்கவும் அரிசி ஆக்கி விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

    மேற்கண்ட 3 பாரம்பரிய ரகங்களும் 500 கிலோ மட்டுமே வரப் பெற்றுள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவே தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்களை அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×