search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
    X

    கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்

    • கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • விவசாய நிலங்களை சேதப்படுத்தினால் வனவிலங்குகளை சுட்டு கொல்வோம் விவசாயிகள் ஆவேசம் அடைந்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மலைப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களுடைய குறைகளை கூறினார்கள்.

    பெரும்பாலும் மலைப் பகுதியில் விவசாயத்திற்கு சவாலாக இருக்கின்ற வன விலங்குகள், யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

    விவசாயிகள் பயிரிடக்கூடிய மலைப்பயிர்களை யானை மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆவேசமடைந்தனர்.

    தொடர்ந்து வனவிலங்குகள் விவசாயம் செய்யக்கூடிய பகுதிகளுக்கு வந்தால் சட்டத்தின்படி சுட்டுக் கொள்வோம் என்று ஆவேசமாக தெரிவித்தனர்.

    மேலும் விவசாயிகள் கேட்கக்கூடிய எந்த கேள்விகளுக்கும் வனத்துறையிடமிருந்து முறையான பதிலும் வராததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

    Next Story
    ×