search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதலூர் வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்
    X

    பூதலூர் வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்

    • இ-சேவை மையங்களுக்கு விவசாயிகள் சென்று பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
    • காப்பீட்டு தொகையில் 25 சதவீதம் இழப்பீட்டு தொகையாக பெறலாம்.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராதா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுப்பிக்கப்பட்ட பாரதப்பிரதமரின் பயிர் காப்பீட்டுத்திட்டம் நடப்பு சம்பா, பருவத்திற்கு துவங்கி விட்டது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்திட ரூ.36,100- சாகுபடி செலவினமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரு ஏக்கருக்கு ரூ. 542 - மட்டும் செலுத்தி தங்கள் நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம். நடப்பாண்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் பயிர் காப்பீடு நிறுவனம் ப்யூச்சர் இன்சூரன்ஸ் நிறு வனம் மூலம் இப்பணி மேற்கொள்ளப்படஉள்ளது. 2023 நவம்பர் 15ம்தேதி வரையில் சம்பா, நெற்பயிரு க்கான காப்பீட்டுத் தொகை செலுத்தலாம். பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் நடவு முடிந்தவுடன் வாங்கிய சிட்டா, அடங்கல்,விதைப்பு சான்று ஆகிய சான்றுகளை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று, உடன் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் தங்கள்வங்கி அல்லது கூட்டுறவுகடன் சங்கம் மூலமாக பயிர் காப்பீடு செய்து கொள்ள லாம். மீதமுள்ள பரப்பிற்கு பொது இ சேவை மைய ங்களில் தங்களது வங்கி பாஸ்புத்தகம், ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல், விதைப்பு சான்று ஆகியவ ற்றுடன் சென்று பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாண்டு நடப்பு பருவத்தில் போதுமான மழை பெய்யாத நிலையில் விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட சம்பா தாளடிபருவ த்திற்கு காப்பீடு செய்வதன் மூலம் விதைப்பு செய்ய இயலாமை அல்லது விதைப்பு பொய்த்து போதல் அல்லது நடவு பொய்த்து போதல் போன்ற இனங்களில் இழப்பீடு பெறலாம். அதாவது ஒரு கிராமத்தில் சராசரியாக பயிர் சாகுபடி செய்யும் பரப்பில் 75 சதவீதத்திற்கும் மேலாக பயிர் செய்ய முடியாத நிலையில் இருந்தால் நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டு தொகையில் 25 சதவீதம் இழப்பீட்டு தொகையாக பெறலாம். அவ்வாறு ஏற்படும் பட்ச்ச த்தில் அக்கிராமத்தில் பயிர் காப்பீட்டு செய்த விவசாயிகள் மட்டுமே இழப்பீடு பெற முடியும். ஆகவே விவசாயிகள் தங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சம்பா அல்லது தாளடி விதைப்பு / நடவு செய்ய உள்ளார் என்று விதைப்பு சான்று அல்லது அடங்கள் (பசலி 1433) பெற்று நவம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீட்டு செய்ய வேண்டும்.

    பயிர்கடன் பெற்ற விவசாயிகள் தங்களின் காப்பீட்டு பிரிமியத்தொகை வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்த ப்பட்டுவிட்டதா? என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    Next Story
    ×